யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில் கறுப்பு மண்சட்டிகள் இன்றையதினம் (02-08-2024) விற்பனையாகி வருகின்றது.
ஆடி அமாவாசை விரதமானது பிதாவினை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதேவேளை, ஒரு பெரிய கறுப்பு மண் சட்டியின் விலை 250 ரூபாவில் இருந்து 300 ரூபா விற்பனையாகி வருகின்றது. ஒரு சிறிய கறுப்புச்சட்டியின் விலை 80 ரூபாவில் இருந்து 100 ரூபா வரை விற்பனையாகி வருகின்றது.
திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மரக்கறிகளையும், கறுப்புச்சட்டியினை கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிந்ததாக உள்ளது.