ரணிலை விட மஹிந்தவே பெரிய “கேம் மாஸ்டர்“: அவர்களது எண்ணம் நிறைவேறாது – அனுர

0
53

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று வியாழக்கிழமை (11.07.24) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த விவாதத்தில் தொடர்ந்து உரையாந்நிய அனுரகுமார திசாநாயக்க,

ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும்.

ரணில் விக்கிரமசிங்க அரசியல் விளையாட்டுகளை விளையாடுவதற்கு சாதுரியமானவராக அறியப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக தனது அரசியல் வாழ்க்கையில் இதைத்தான் செய்து வருகிறார். எனினும், அவரது அரசியல் விளையாட்டுகள் அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாத்திரமே பலனளிக்கிறன.

அவரது அரசியல் விளையாட்டுக்களால் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனங்களைப் பெற முடியாமல் போனது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறான அரசியல் விளையாட்டுக்களை விளையாடுவதில் மூளையாக செயற்படுபவர்.

மஹிந்த ராஜபக்ச பல அரசியல் கட்சிகளை அழித்துள்ளதுடன், பல கட்சிகளுடன் கைக்கோர்த்துள்ளார். தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நட்பாக பழகும் திறனுடையவர். அவர் ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பெரிய விளையட்டு வீரர்.” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் இந்த முயற்சிகள் எதுவும் வெற்றிபெறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.