“உலகில் காலனித்துவ நாடாக இலங்கை மாறும்“: ஐ.தே.க. எச்சரிக்கை

0
90

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரப் பணியை எவறேனும் சீர்குலைப்பார்களாயின் உலகில் காலனித்துவ நாடாக இலங்கை மாறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் காலி ரத்கமஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உள்ளூர் மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பில் முழுமையான புரிந்துணர்வு ஜனாதிபதிக்கு உண்டு. அதன் காரணமாகவே குறுகிய காலத்தில் இலங்கையை இவ்வாறானதொரு நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இந்த பயணத்திற்கு அனைத்து மக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும். ஜனாதிபதி நாட்டை விற்றதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை விற்றாலும் வங்குரோத்தான அரசை யார் வாங்குவது” என்றும் கேள்வி எழுப்பினார்.