டிசம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது புஷ்பா 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

0
32

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா 1.

இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படம் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் நிறைவுறாமல் இருப்பதால் படம் வெளியாகும் திகதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதியன்று புஷ்பா 2 திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.