சித்திரை மாதத்தில் பிறந்த ஆண் குழந்தை – தாத்தா உயிருக்கு ஆபத்து: மூடநம்பிக்கையால் பேரன் கொலை

0
111

தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகிலுள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும் வீரமுத்துவின் மகள் சங்கீதாவுக்கும் பால முருகன் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் சங்கீதா – பாலமுருகன் தம்பதிக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார் சங்கீதா.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி இரவு தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையைக் காலையில் காணவில்லை. குழந்தையை தேடியதில் வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாத்தாவான மாரிமுத்துவே இக் கொலையை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குழந்தை சித்திரை மாதம் பிறந்தமையால், தாத்தாவின் உயிருக்கு ஆபத்து என்றும் கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையாலும் தாத்தா வீரமுத்து குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடியுள்ளார். வீரமுத்துவை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.