குடும்பத்துடன் வெளிநாடு சென்ற நடிகை சினேகா: இணையத்தினை கலக்கும் புகைப்படங்கள்

0
85

நடிகை சினேகா தனது குடும்பத்துடன் வௌிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் சினேகா அடியெடுத்து வைத்தார்.

இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார். கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் இவர் வெளிநாடு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Oruvan