தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும்; மதுரை ஆதீனம் கருத்தால் பரபரப்பு!

0
37

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் தமிழக மக்களின் முடிவில் சின்ன வருத்தம், என்றும் இலங்கை தமிழர்களை கொன்றவர்களை ஆதரிச்சிட்டாங்க எனவும் மதுரை ஆதினம் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும்

ஊடகங்களிடம் பேசியபோதே மதுரை ஆதீனம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது வர் கூறுகையில், ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களுக்கு தமிழக மக்கள் ஓட்டு போட்டதே தமக்கு ப்வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதன்போது இந்திய பிரதமர் மோடியை சந்திப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மதுரை ஆதினம், பிரதமர் மோடியை தாம் நிச்சயம் சந்திப்பேன் என்றும், அவரிடம், ஈழத்தில் மிச்சமிருக்கும் தமிழர்களுக்காக தனிநாடு கோரிக்கையினை தாம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழம் மலர வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தெரிவித்த அவர், இலங்கையிடம் இஎருந்து கச்சதீவை மீட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.