பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

0
60

இந்தியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுவாக இருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.