2024 மக்களவைத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் மேலும் தெரிவித்துள்ள கருத்துகளாவது,
தமிழ்நாட்டில் முதன்முறையாக, 1996 தேர்தலில் மதிமுக தலைமையிலான மூன்றாவது அணிக்கு 30 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அடுத்து 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் தேமுதிக 38 இலட்சம் வாக்குகளைப் பெற்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாஜக, பாமகமூன்றாவது அணிக்கு 75 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அது 53 இலட்சம் வாக்குகளாகக் குறைந்தது.
தினகரன் கட்சி 22 இலட்சம், கமல் 16, நாம் தமிழர் 15 இலட்சம் வாக்குகள் 2021 சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் 30 இலட்சம் வாக்குகள் உடன் மூன்றாம் இடம் பிடித்தது. தினகரன், கமல் பத்து இலட்சத்திற்கும் கீழே இறங்கினர்.
2024 தேர்தலில் பாஜக 9 அதன் கூட்டணி 3 என மொத்தம் 12 இடங்களில் இரண்டாவது இடம் பெற்று இருக்கின்றது. 11 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இருக்கின்றது. இது அவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி.
நாம் தமிழர் 32 இலட்சம் வாக்குகளைப் பெற்று நான்காம் இடம் பெற்றது. அதிமுக 5 தொகுதிகளில் நான்காம் இடத்திற்குப் போய்விட்டது. தென் மாவட்டங்களில் அதன் வாக்கு வங்கி கரைந்து விட்டது. மேற்கு மாவட்டங்களிலும் ஓட்டை விழுந்து விட்டது.
சாதி, மதவெறிப் பரப்பு உரைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் புதிய வாக்காளர்கள், ஆட்சிக்கு எதிராக வாக்கு அளித்து இருக்கின்றார்கள். என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.