இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்; பின்னடைவில் மோடி!

0
61

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ண்டிக்கை இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.

பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னைடவை சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தற்போது வெளியான தகவல்படி பெரும்பான்மை வெற்றியுடன் மீண்டும் இந்தியபிரதமராக நரேந்திர மோடியே ஆட்சி அமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

18-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.