மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு?

0
64

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு மட்டும் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உடலுக்கு ஒய்வினை அளிக்கவும், சிறிது காலத்தை தமது குடும்பத்துடன் செலவிடவும் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாகவும் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொள்வதற்கு மிட்செல் ஸ்டார்க் முக்கிய பங்கை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.