வாகனமொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

0
46

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கொஸ்வாடிய பகுதியில் வாகனமொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையினால், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதாக அவற்றிற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மவுஸ்ஸாகலை, விமலசுரேந்திர, கெனியோன், லக்ஷபான மற்றும் நவலக்ஷபான ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.