தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதாக LPL அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.