தாய்வானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!

0
45

தாய்வானில் உள்ள ஹுவாலியன் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஹுவாலியன் மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற் பகுதியில் நேற்று மாலை இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

ஹுவாலியன் கடற்கரை அருகே பல்வேறு இடங்களில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.