கடந்த முப்பது ஆண்டுகளில் ஜப்பானின் கன்சாய் விமான நிலையத்தில் (Kansai Airport, Japan) பயணிகளின் பயணப்பொதிகள் (லக்கேஜ்) ஏதும் தொலைந்து போகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளதுடன் இது உலக சாதனை என குறிப்பிடப்படுகிறது.
அத்தோடு கடந்த ஆண்டு மாத்திரம் கன்சாய் விமான நிலையத்திற்கு பத்து மில்லியன் பயணப் பொதிகள் வந்ததாக ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆயிரம் விமானப் பயணிகளும் 7.6 பயணப்பொதிகளை தவறாக வைப்பது பொதுவானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையங்களில் பயணிகளின் பயணப்பொதிகள் பல்வேறு காரணங்களுக்காக தவறாக மாற்றப்படுகிறதாகவும் மனிதத் தவறுகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.