நேற்று மைதானத்தில் அசத்திய வீரர்; இன்று உயிரிழந்த சோகம்: 20 வயதான ஜோஸ் பாகருக்கு என்ன நடந்தது?

0
49

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் வார்செஸ்டர்ஷிர் கவுண்டி அணிக்காக விளையாடியவர் 20 வயதேயான ஜோஸ் பாகர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கவுண்டி ஆட்டத்தில் தொர்ஹாம் அணிக்கு எதிராக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

இவ்வாறு நேற்று அபாரமாக விளையாடிய ஜோஸ் பாகர் இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் பாகரின் இந்த திடீர் இறப்பு எதனால் நேர்ந்தது என்பதை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்டனர். இதனையடுத்து பாகரின் குடும்பத்தை மனதில் இருத்தி தற்போது அவரது மரணத்தைக் குறித்து எதுவும் பேச வேண்டாம் என வார்செஸ்டர்ஷிப் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவரது குடும்பத்தினர் அனுமதித்தால் கடைசி சில மணி நேரங்களில் பாகரின் உடலை வார்செஸ்டர்ஷிர் க்ளப்பில் வைத்து இறுதி மரியாதை செய்யப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜோஸ் பாகர் இதுவரையில் நடந்து முடிந்த 22 முதல்தர போட்டிகளில் பந்து வீசியிருக்கிறார். அதில் 43 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

17 லிஸ்ட் ஏ போட்டிகளில் பந்துவீசி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதோடு இங்கிலாந்து அணிக்காக மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்து வரும் நிலையில் இந்த துயர சம்பவம் நடந்திருப்பது வேதனையளிக்கிறது.

Josh Baker dead