12 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணி வெற்றி

0
104

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்று, நீண்ட கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளால வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்தும் தோல்வியையே சந்தித்து வந்த கொல்கத்தா அணி இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 51வது போடியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றபெற்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் சலக விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை குவித்தது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும், வெங்கடேஷ் ஐயரும், மணீஷ் பாண்டேவும் இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

இதில் வெங்கடேஷ் ஐயர் 70 ஓட்டஙகளையும், மணீஷ் பாண்டே 42 ஓட்டங்களையும் குவித்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தடிய போது மும்பை அணியின் துடுப்பாட்ட வீரர்களையும் கொல்கத்தா அணியினர் தடுமாறச் செய்தனர்.

மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுக்களையும், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பெற்றுக்கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.

கடைசியாக 2012ஆம் ஆண்டுக்கு மும்பை அணியை கொல்கத்தா அணி வான்கடே மைதானத்தில் தோற்கடித்திருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக வெங்கடேஷ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டார். இந்த தோல்வியுடன் மும்பை அணியின் ப்ளேஓப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.