கொழும்பு ITC ரத்னாதிப (Ratnadeepa) பிரமாண்ட ஹோட்டல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று திறக்கப்படவுள்ளது. குறித்த ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள வான் பாலமானது தெற்காசியாவின் ஒரே மற்றும் முதல் வான்பாலமாக இது அறியப்படுகின்றது.
குறித்த பாலம் தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இது 55 மீற்றர் நீளமுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITC ரத்னதீபா ஹோட்டல் திட்டமானது இந்தியாவில் புகழ்பெற்ற ITC Ltdஇன் துணை நிறுவனமான Welcome Hotels Lanka Ltd இன் செயல்படுத்தப்பட்டது.
குறித்த நிறுவனம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய முதலீட்டை மேற்கொண்ட செயற்திட்டம் இதுவாகும். மேலும் இதற்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ITC Ltd மேற்கொள்ளும் முதல் முதலீடாகவும் இத்திட்டம் உள்ளது. இந்த ஹோட்டலில் மக்களை கவரும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
இந்த அதிசொகுசு ஹோட்டலின் அறிமுகமானது இலங்கையின் சுற்றுலாத்துறையில் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.
சிறப்பம்சங்கள்
சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதுடன் உள் வசதிகள் அனைத்துமே மிகவும் பிரமாண்டமாக முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அதியுயர் அலங்காலர பொருட்கள் கொண்டு குறித்த ஹோட்டல் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் இருந்து காலிமுகத்திடல் கடற்கரையை முழுவதுமாக பார்த்து இரசிக்க கூடியதாக காணப்படுகின்றது.
இந்த ஹோட்டல் திறக்கப்பட்டதன் பின் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் பங்காற்றும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.