கனடா அனுப்புவதாக கூறி நிதி மோசடி சம்பவம் ; 50 கடவுச்சீட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

0
34

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடமும் ஆண் ஒருவரிடமும் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக படல்கம நகருக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது வீட்டில் இருந்து சுமார் 50 கடவுச்சீட்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.