வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்தது!

0
37

மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம்  காரணமாக செயின்ட் கிளேர் நீர்வீழ்ச்சி மற்றும் டோவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக்  கவர்ந்த நீர்வீழ்ச்சியாக இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் விளங்குகின்றன. 

இதேவேளை, மேல் கொத்மலை பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.