தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்த தொடங்கிய வயோதிபர் மரணம்

0
46

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

76 வயதுடைய கோபால் ராவ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழு நேற்று ராமேஸ்வரம் – சங்குமால் கடற்கரையில் இருந்து, தலைமன்னாருக்கு படகு மூலம் வந்து இன்று (2024.04.23)  அதிகாலை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்றுள்ளனர்.

இதன்போது தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்று கொண்டிருந்த குறித்த வயோதிபர், நீந்த தொடங்கிய 3 மணி நேரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு, படகில் ஏறிய போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழதுள்ளார்.

இதை அடுத்து அவரது உடல் தனுஷ்கோடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் கடலில் நீந்தி வந்த வயோதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக நீச்சல் வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.