போலி இணையத்தளங்கள் நீக்கப்படும்

0
45

போலி இணையத்தளங்கள் நீக்கப்படும்இணையாக காணப்படும் போலி இணையத்தளங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரித்துள்ளது.

இவ்வாறான 5 போலி இணையத்தளங்களை இணையத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து 35 பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.