கில்லி படத்தின் முதல் நாள் வசூல்.. ரீ ரிலீஸில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

0
76

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி. மக்கள் மனதை வென்ற இப்படம் தற்போது 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆஷிஷ் வித்யார்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர்.

நேற்று திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறது. திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கில்லி படத்தின் முதல் நாள் வசூல்.. ரீ ரிலீஸில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Ghilli First Day Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 7 கோடி முதல் ரூ. 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. ரீ ரிலீஸில் இதுவரை எந்த படமும் செய்த வசூல் சாதனையை கில்லி படம் முதல் நாள் செய்துள்ளது என கூறி வருகின்றனர்.