கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

0
77

பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களின் கோழி இறைச்சியின் விலை மேலும் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாரஹென்பிட்டி பொளுதார மத்திய நிலையத்தில் இன்று (19) 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 1 கிலோ கறி கோழி இறைச்சி 900 ரூபாவாகவும் 1 கிலோ ஆட்டு இறைச்சி 3,300 ரூபாவாகவும் 1 கிலோ  மாட்டிறைச்சி 2400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.