நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

0
55

தெல்தெனிய கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பதியினர் தெல்தெனிய பகுதியிலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றுள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 வயதான கணவன், 22 வயதான மனைவியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரும் உயிரிழந்துள்ளார்.