பயணம் செய்பவர்களுக்கு விசேட அறிவித்தல்

0
81

தொலைதூரப் பயணிகளின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சாதாரண பயணிகளைப் போல நீண்ட தூரப் பேருந்துகளில் ஏறி பயணிகளின் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பது வழக்கம்.

எனவே பயணிகள், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பதுளை – கொழும்பு தொலைதூரப் பேருந்துகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.