லங்கம நாளாந்த வருமானம் 25 மில்லியன்!

0
39

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு செயற்படுத்தப்பட்டுள்ள விசேட பஸ் சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக கடந்த 5ம் திகதி முதல் சுமார் 200 மேலதிக பஸ்கள் இயக்கப்பட்டு வீசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இதனுடாக தற்போது எமது நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்  பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை மற்றும் மத்திய பஸ் நிலையங்களுக்கு வருகை தந்த எமக்கு போதிய தொலைதூர சேவை பஸ்கள் இன்மையால் தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர்  பண்டுக ஸ்வர்ணஹன்ச, போதிய பஸ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
 
இதேவேளை, அதிவேக வீதிகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை அதிவேக வீதிகளின் வருமானம் கணிசமான அளவு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக  அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரதான ரயில் மார்க்கத்தின் வழமையான நீண்ட தூர ரயில் சேவைகளை தவிர, கடந்த 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை 12 மேலதிக ரயில்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பதுளைக்கு 02 ரயில்கள், பதுளையிலிருந்து கொழும்புக்கு 02 ரயில்கள், காலிக்கு 02 ரயில்கள், காலியிலிருந்து கொழும்புக்கு 02 ரயில்கள், பெலியத்தவிற்கு 02 ரயில்கள் மற்றும் பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு 02 ரயில்கள் என இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.