சக வீரரை ‘சனியன்’ என திட்டிய அஸ்வின்!

0
319

குஜராத் அணிக்கு எதிராக, சக அணி வீரர் ஒருவரை, அஸ்வின் தரக்குறைவாகப் பேசியதாக ஸ்டம்ப் மைக்கில் ஓடியோ பதிவாகி உள்ளது.

10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், இதுவரை (ஏப்ரல் 11) 25 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தாம் மோதிய 5 போட்டிகளில் 4இல் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

காரணம் இந்த ஆட்டத்தில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்கூட எடுக்காமல் 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பாக, அவர் வீசிய 17வது ஓவரில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி உட்பட 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. அவர் கசியவிட்ட இந்த ஓட்டங்கள், குஜராத்தின் அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தவிர, இந்தப் போட்டியின்போது, அஸ்வின் சக அணி வீரர் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியின்போது 17வது ஓவரை வீசிய அஸ்வின், அப்போது ஃபீல்டிங்கில் சில மாற்றங்களைச் செய்தார். அதாவது, ஷார்ட் தேர்ட்மேன் திசையில் நின்றிருந்த ஃபீல்டரைப் பின்னால் செல்ல சொல்வதற்காக சஞ்சு சாம்சனிடம், “பின்னாடி போய் நிற்க சொல்லு.. அந்த சனியனை” என்று அஸ்வின் சொல்வதாகவும், அதற்கு சஞ்சு சாம்சன் உடனே, “பின்னாடி நில்லுடா டேய்” என்று அறிவுறுத்தியதாகவும், மைதானத்தின் ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அஸ்வின் யாரைக் குறிப்பிட்டு திட்டினார் என்பது தெரியவில்லை.

குஜராத் அணிக்கு எதிராக, சக அணி வீரர் ஒருவரை, அஸ்வின் தரக்குறைவாகப் பேசியதாக ஸ்டம்ப் மைக்கில் ஓடியோ பதிவாகி உள்ளது