டைட்டானிக் கப்பல் மூழ்கப்போவதை முன்பே கணித்த எழுத்தாளர்: 14 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல்

0
49

டைட்டானிக் கப்பல் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஒன்று. 1912 ஏப்ரல் 14 அன்று இந்த கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியது.

இந்த கப்பல் மூழ்கியதன் பின்னர் இதை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள், நாவல்கள் எடுக்கப்பட்டன. ஆனால் டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சுமார் 14 வருடங்களுக்கு முன்னரே ஒரு எழுத்தாளர் இதைக் குறித்து தனது நாவலில் எழுதி வைத்துவிட்டார்.

1898ஆம் ஆண்டிலேயே மோர்கன் ரொபர்ட்சன் எனும் எழுத்தாளர் ‘Futility, Or The Wreck Of The Titan’ என்ற நாவலை எழுதினார். இது கற்பனைக் கப்பலின் கதையை தழுவியதாக அமைந்திருந்தது. எனவே இந்த நாவலுக்கும் 1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

மோர்கன் செப்டெம்பர் 30, 1861ஆம் ஆண்டு ஓஸ்வேகோவில் பிறந்தவர். இவரது தந்தை ரொபர்ட்சன் ஒரு கப்பலின் கேப்டனாக இருந்தார் என்பதாலோ என்னவோ இவர் கடல் குறித்த சில சாகசங்களை எழுதினார். இவரை மக்கள் ‘மனநோயாளி’ எனவும் ‘கடவுளின் அருள்’ பெற்றவர் எனவும் அழைத்தனர்.

இவர் எழுதிய குறித்த நாவல் 1898ஆம் ஆண்டு வெளிவந்தது. அதாவது டை்டானிக் கப்பல் சவுத்தாம்ப்டனிலிருந்து நியூயோர்க் நகருக்கு புறப்படுவதற்கு 14 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.