மிகுதிக் கொடுப்பனவு இன்றுமுதல் வழங்கப்படும்

0
45

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவின் மீதியான 5,000 ரூபா அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரூ. 10,000 இன் ஒரு பகுதியை அரசு  அரச ஊழியர்களுக்கு முன்னதாகவே செலுத்தியுள்ளது. அரசு ஊழியர்களின் புத்தாண்டு காலத்துக்கான பண்டிகை முன்பணத்தின் மொத்தக் கணக்கீடு கிட்டத்தட்ட ரூ. 6 பில்லியனை அரசாங்கம் ஏற்கனவே செலுத்தியுள்ளது. 

வழமையாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 16 ஆம் திகதி முதல் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஆரம்பிக்கிறது, முதல் முன்னுரிமை ஆசிரியர்களின் சம்பளம், இரண்டாவதாக முப்படையினரின் சம்பளம் மற்றும் மூன்றாவது இடத்தில் மாகாண சபை ஊழியர் சம்பளம்.

எனினும், புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதி வழங்கப்படும். வழக்கமாக அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மாதந்தோறும் 25ம் திகதியே வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

இதன்படி, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மீதம் உள்ள 5,000 ரூபா உட்பட மொத்தம் 107 பில்லியன் ரூபாவை இன்று முதல் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாதாரண சம்பளத்தை விட இம்மாதத்திற்கு கிட்டத்தட்ட 13 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. ” என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கிட்டத்தட்ட ரூ. 28 பில்லியன் ஏற்கனவே ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதத்துடன் தொடர்புடைய ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்படும் என நிதி இராஜங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.