அமெரிக்காவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல்

0
52

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் வைகாசி மாதம் ஐந்தாம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் 115 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 15 ஆம் நாளன்று தொடங்கி எதிர்வரும் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக் கொள்ளப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ அரசாங்கம்

அத்தோடு எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமெரிக்கா ஒன்பது தேர்தல் மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து 10 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்களென குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் செறிவைப் பொறுத்து தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில்,

1. கலிபோர்னியா வடக்கு (California North)- 1 பிரதிநிதி

2.​கலிபோர்னியா (California)– 1 பிரதிநிதி

3.மாசசூசெட்ஸ் (​Massachusetts)– 1 பிரதிநிதி

4.​மத்திய மேற்கு (Mid-west)– 1 பிரதிநிதி

5.​நியூ ஜெர்சி (New Jersey)– 2 பிரதிநிதிகள்

6.​நியூயார்க் (New York)– 1 பிரதிநிதி

7.​பென்சில்வேனியா (Pennsylvania)– 1 பிரதிநிதி

8.​டெக்சாஸ் (Texas) – 1 பிரதிநிதி

9.​தேசிய பட்டியல் (National List) – 1 பிரதிநிதி