கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள்! இந்தியா கோரிக்கை எதனையும் விடுக்கவில்லை

0
56

வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கச்சதீவு விவகாரம் பூதாகாரமாகியுள்ளது. இலங்கைக்கு கச்சதீவை இந்திரா காந்தி தாரை வார்த்து விட்டதாக குற்றம் சுமத்தியுள்ள பாஜக கச்சதீவு தாரை வார்க்கப்பட்டமைக்கு திமுகவும் மௌனம் காத்ததாக குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதோடு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அப்படி தொடர்பு இருந்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.