குறைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த 15% விசேட வட்டி வீத முறைமை இன்று 8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி வருமானத்தை சிரேஷ்ட பிரஜைகளுக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இலட்சக்கணக்கான சிரேஷ்ட பிரஜைகளின் கோரிக்கையாக இது அமைந்திருப்பதால், உரிய வட்டி விகிதத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.