அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா

0
53

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.

அதேவேளை ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.