கச்சத்தீவு இலங்கை கட்டுப்பாட்டில் தான் உள்ளது: அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

0
107

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், “கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை“ என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை. ஒருவேளை கச்சத்தீவு குறித்து கோரிக்கை வந்தால் அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.