களிமண், பித்தளை மற்றும் பிரம்பு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!

0
53

இத்தாலி, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குக் களிமண், பித்தளை மற்றும் பிரம்பு தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்துறையினரை இணைத்துக்கொண்டு இந்தத் திட்டத்தை தமது அமைச்சின் தலையீட்டுடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாகச் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்துறையினருக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.