ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்திய புகைப்படத்திற்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து

0
47

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியபோது இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த இளம்பெண்கள், இளைஞர்கள் உட்பட சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர்.

கொடூர தாக்குதல் நடத்திக் கொலை செய்தும் திருப்தியடையாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அங்கிருந்த பலரைக் கடத்திச் சென்றனர்.

அப்படி கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் ஷானி லூக் (Shani Luuk, 22) என்னும் ஜேர்மன் இஸ்ரேலிய இளம்பெண். ஷானியை தாக்கி அரை நிர்வாணமாக்கி ட்ரக் ஒன்றின் பின்னால் போட்டு அவள் உடல் மீது காலைப் போட்ட வண்ணம் ஊர்வலமாக கொண்டு சென்றனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் சிலர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின.

இந்நிலையில், ஷானியை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ள புகைப்படத்துக்கு ஊடகவியலாளர் சிறப்புப் பரிசொன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தை எடுத்த Ali Mahmud என்பவருக்கு, ’Reynolds Journalism Institute’s award for the team picture story of the year’ என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் வெளியானதற்கே கடும் சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு சிறப்பு விருது கிடைத்துள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

தந்தையின் கருத்து

ஆனால் ஷானியின் தந்தையான Nissim Luuk, அந்த புகைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். அந்த புகைப்படம் 50 ஆண்டுகளில் மிக முக்கியமான ஒன்று என்று கூறும் Nissim Louk, சில புகைப்படங்கள் மனித நினைவுகளை வடிவமைக்கின்றன என்கிறார்.

தன் மகளின் புகைப்படமும், ஹமாஸ் குழுவால் Noa Argamani கடத்தப்படுவதைக் காட்டும் புகைப்படமும் இந்த யுகத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளன என்கிறார் அவர்.

எதிர்காலத்துக்கு தகவல் கொடுப்பதற்காக அதை பயன்படுத்துவதை நான் நல்லது என்று கருதுகிறேன் என்று கூறும் Nissim Luuk, நான் அழத்துவங்கினால் அதனால் என்ன நடக்கப்போகிறது? இது வரலாறு 100 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து இங்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வார்கள். நான் உலகம் முழுவதும் பயணிக்கிறேன். என் மகள் ஷானியை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்கிறார் Nissim Luuk.