மீண்டும் சிறை செல்வாரா ரஞ்சன் ராமநாயக்க..!

0
45

கண்டியில் இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி 10 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஜூன் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குறித்த வழக்கு இன்று 27ஆம் திகதி கண்டி மேலதிக நீதவான் (01) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு

இதன்போது வழக்கு தொடர்பாக மேலதிகமாக ஆலோசிக்கப்பட வேண்டியிருப்பதால் தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.