கதிரியக்க சிகிச்சைக்கு அவசியமான இயந்திரம் பழுது: பல சிறுவர்களின் உயிர் ஆபத்தில்!

0
62

கதிரியக்கச்சிகிச்சைக்கு அவசியமான இயந்திரம் செயல்இழந்துள்ளதால் மஹரகம வைத்தியசாலையில்புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிற்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரமே சேதமடைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி முதல் லீனியர் அக்சிலரேட்டர் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமை பாரதூரமாக காணப்படுகின்ற போதிலும் சுகாதார அமைச்சு இது குறித்து அக்கறை செலுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அபேக்சா மருத்துவமனையில் ஐந்து லீனியர் அக்சிலேட்டர்கள் உள்ளன சிகிச்சைகளை வழங்குவதில் இவை முக்கிய பங்களிப்பு செய்கின்றன எனினும் பழுதடைந்த இந்த லீனியர் அக்சிலேட்டர்கள் சிறுவர்களிற்கு சிகிச்சைவழங்குவதற்கு மிகவும் அவசியமானவையாக காணப்படுகின்றன.

லீனியர் அக்சிலேட்டர்கள் செயல் இழந்துள்ளதால் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.மேலும் இதன் காரணமாக சிறுவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை கதிரியக்கசிகிச்சைகளுக் தனியார் மருத்துவமனைகள் ஏழுஇலட்சம் முதல் 15 மில்லியன் வரை அறவிடுகின்றன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை மகரகம வைத்தியசாலையில் இது தொடர்பில்பாரதூரமான நிலை காணப்படுவதையும்  நோயாளிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதையும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன ஏற்றுக்கொண்டுள்ளார்

செயல் இழந்துள்ள இயந்திரங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.