மத்திய வங்கி வட்டி வீதங்கள் மேலும் குறைகிறது!

0
125

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அதன் மதிப்பு முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.