தவறுதலாக அழிந்த போட்டோக்களை கூகுள் போட்டோஸ் மூலம் திரும்ப பெறுவது எப்படி?

0
235

உங்களுக்கு தேவையான போட்டோக்களை செலக்ட் செய்து ரீஸ்டோர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அந்த போட்டோ மீண்டும் அதன் பேஸ் லொகேஷனில் சேவ் செய்யப்பட்டுவிடும்.

நம்மில் அனைவருமே வாழ்வில் ஏதேனும் ஒரு முறையாவது தங்கள் டிவைசுகளில் ஸ்டோர் செய்து வைத்துள்ள போட்டோக்களை தெரியாமல் அழித்துவிட்டு, அவற்றை எப்படி திரும்ப பெறுவது என்று தவித்திருப்போம். அப்படிப்பட்டவர்களுக்கான பதிவு தான் இது

நீங்கள் கூகுள் போட்டோஸ் செயலியை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களது போட்டோஸ் பெரும்பாலும் தானாகவே கூகுள் போட்டோஸின் ட்ராஷ் போல்டரில் நகர்த்தப்பட்டு விடும். அங்கு நகர்த்தப்பட்டு 60 நாட்கள் வரை அவை அங்கேயே சேமித்து வைக்கபடும். அதற்குள் நீங்கள் அதனை மீட்டெடுத்து கொள்ளலாம். ஒருவேளை ட்ராஷ் ஃபோல்டரில் இருந்தும் நீங்கள் அதனை டெலிட் செய்து விட்டால் அவற்றை மீட்டெடுக்க இயலாது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் கூகுள் சப்போர்ட்டின் அறிக்கையின் படி நீங்கள் 2 வருடத்திற்கும் மேல் ஆக்டிவாக இல்லாமல் இருந்தால் உங்களின் டேட்டா அனைத்தும் நிரந்தரமாக அழிக்கப்படுவதர்கான வாய்ப்புகள் அதிகம். இது மட்டுமில்லாமல் உங்களின் ஸ்டோரேஜ் லெவல் இரண்டு வருடத்திற்கும் மேல் முழுவதும் நிரம்பியிருந்தாலும் அவை அழிக்கப்பட்டுவிடும்.

ட்ராஷ் போல்டரை செக் செய்யவும் :

பெரும்பாலும் அழிக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் ட்ராஷ் ஃபோல்டரில் சேவ் ஆகியிருக்கும். அங்கு சென்று அழிக்கப்பட்ட போட்டோக்களை கண்டுபிடித்து அதில் உங்களுக்கு தேவையான போட்டோக்களை செலக்ட் செய்து ரீஸ்டோர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அந்த போட்டோ மீண்டும் அதன் பேஸ் லொகேஷனில் சேவ் செய்யப்பட்டுவிடும்.

ஆர்க்கீவ் \ ஃபோல்டரை செக் செய்யவும் :

சில சமயங்களில் போட்டோக்களை நமக்கே தெரியாமல் ஆர்க்கீவ் செய்து விடுவோம். ஆனால் அவை டெலிட் ஆகி விட்டதாக தவறாக நினைத்து கொள்வோம். உங்கள் போனில் உள்ள கூகுள் போட்டோஸ் செயலிக்கு சென்று ஆர்க்கீவ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து உள்ளே சென்றால் அங்கே காணாமல் போன பல போட்டோக்களை நம்மால் பார்க்க முடியும். அதில் நமக்கு தேவையான போட்டோ இருந்தால் செலக்ட் செய்து அன் ஆர்க்கீவ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

கூகுள் சப்போர்ட்:

மேலே கூறிய எந்த வழியும் சரியாகவில்லையெனில் நேரடியாக கூகுள் சப்போர்ட் டீமை காண்டாக்ட் செய்து உதவி கேட்கலாம். அதற்கு கூகுள் டிரைவிற்கு சென்று ஹெல்ப் பேஜிற்கு சென்று “missing or deleted files” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் தொடரும் பாப் அப் ஆப்ஷனை தேர்வு செய்து “சாட்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் கூகுள் சப்போர்ட் டீமிடம் நாம் “சாட்” செய்து போட்டோக்களை திரும்ப பெற உதவி கேட்கலாம்.