கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

0
62

யாழ்ப்பாணம், இளவாலை – சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று நீராடச் சென்ற மூவரில் இருவர் காணாமல்போன நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நாவற்குழியைச் சேர்ந்த சிவநேசன் திவ்யன் (வயது 21), செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த தேவன்கருணதாசா யூட் (வயது 36) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்