‘சந்தேகத்தை தீர்க்க DNA எடுத்தேன் ‘

0
141

மகன் குறித்து பேசிய நடிகர் அபாஸ்

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நடிகர் அபாஸ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த அபாஸ், மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது.இந்த நிலையில், நடிகர் அபாஸ்  கொடுத்த பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில், நடிகர் அபாஸ் இடம் அவரது மூத்த மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய அபாஸ் ‘அவர் ரொம்ப அமைதியான ஒருவர், அந்த வயதில் நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்ப சிம்பிள், Mature-ஆக இருக்கிறார். அதனால் எனக்கே ஆச்சிரியப்பட்டேன், என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு DNA செக் பண்ணும்போது என் பையன் தான்’ என கூறினார்.