முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா!

0
104

உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி தொடர்பில் அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பானியின் வீட்டின் பெயர் ஆன்டிலியா (Antlia) மும்பையில் இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 15,000 கோடி என கூறப்படுகிறது.

மொத்த ஊழியர்கள்

குறித்த வீட்டுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அண்டிலிஸ் தீவின் நினைவாக இந்த வீட்டிற்கு Antlia என பெயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வீட்டினை நிர்வகிப்பதற்கு சுமார் 600 பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் 24×7 மணி நேரமும் வேலை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை தோட்டக்காரர்கள், எலக்ட்ரீஷியன்கள், பாதுகாவலர்கள், பிளம்பர்கள், ஓட்டுநர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள் என மொத்தம் 600 பேர் முழுமையாக பராமரிப்பு செய்துவருதோடு பலர் அந்த வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சம்பளம்

அத்தோடு அம்பானி வீட்டில் உள்ள ஊழியர்கள் நாட்டிலேயே சிறந்த மற்றும் மிகவும் பயிற்சி பெற்ற ஊழியர்களாக உள்ளனர், மேலும் அவர்களும் படித்தவர்கள்.

அதன் அடிப்படையில் அம்பானி குடும்பம் ஒவ்வொரு வீட்டுப் பணியாளருக்கும் அவரவர் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கி வருகின்ற நிலையில் அங்கு பல ஊழியர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.2 லட்சம் என்பது தெரிய வந்துள்ளது.