கடலுக்கு அடியில் மின் இணைப்பு சேதம்; மத்திய ஆபிரிக்காவில் இணையத்தடை

0
62

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும் கண்டத்தின் தெற்கில் உள்ள சில நாடுகளுக்கும் இயங்கும் நான்கு இணைய மின் இணைப்பு கேபிள்கள் கடந்த 14 ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளது. இதனையடுத்து மத்திய ஆபிரிக்கா பகுதியில் பெரும் இணையத்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நைஜுரியா, கோட்டி ஐவரி, லைபீரியா, கானா, புர்கினா பாசோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்ட்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.