நாட்டில் மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
84

நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கோவா தவிர்ந்த மேல்நாட்டு, கீழ்நாட்டு மரக்கறி வகைகள் பலவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளது.

அநேகமான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை மொத்த விற்பனை விலை 300 ரூபாவாக காணப்பட்டது.

மரக்கறி வகைகள்
ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை 430 ரூவாக காணப்பட்டது. ஒரு கிலோ கிராம் லீக்ஸின் விலை 150 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் கோவாவின் மொத்த விற்பனை விலை 480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 450 ரூபா முதல் 480 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.