பணம் சம்பாதிக்கும் இலங்கையர்கள்

0
121

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று அனைத்தும் இருக்கிறது. அதேபோன்று மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி, ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை நேற்று (13) பிற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்று காலி முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. அதை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் பெருமளவு வருமானம் பெற முடியும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்.

அதன்படி, இந்தப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தனியான சட்டம் கொண்டு வரப்படும். இங்கு கட்டிடங்கள் மாத்திரம் இருந்தால் இப்பகுதிகளுக்கு யாரும் வருகை தர மாட்டார்கள். சுற்றுலா துறையில் தென் மாகாணத்திற்கு ஒரு சிறப்பிடம் உள்ளது.

காலி கோட்டையில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் அகற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்துடன், முறையான திட்டமிடலின் ஊடாக காலி நகரை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாம் செயற்பட்டு வருகின்றோம். அதன்படி, நாட்டின் முக்கிய சுற்றுலா நகரமாக காலி மாறும்.

சுற்றுலாத்துறை என்பது நாட்டிற்கு விரைவாக வருமானம் தரும் துறையாகும். அதிக பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டிற்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று அனைத்தும் இருக்கிறது. அதேபோன்று மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.

மேலும், கறுவா விளைச்சலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேயிலை பயிருக்கு பொருத்தமான இடங்களில் தேயிலை பயிரிடுவதன் மூலமும், ஏனைய இடங்களில் கறுவா பயிரிடுவதன் மூலமும் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

அதேபோன்று, இப்பகுதிகளுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நிறுவனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளால் காலி பெரும் அபிவிருத்தி அடையும் என நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.