சிறிலங்கா காவல்துறையினருக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி

0
87

சைபர் குற்ற விசாரணை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விசேட பயிற்சிநெறிக்காக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு இந்தியா சென்றுள்ளது. அவர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனத்தில் (CTDI) பயிற்சி பெறுவார்கள்.

 இந்தியாவிற்கு புறப்பட்டு

குறித்த குழுவினர் கடந்த 3ஆம் திகதி இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் ஒரு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், 02 உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் 17 காவல்துறை பரிசோதகர்கள் அடங்குவர். அவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை நாட்டிற்கு திரும்பவுள்ளனர்.

இருவரின் ஆலோசனைக்கு அமைய

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இக்குழுவினர் சம்பந்தப்பட்ட பாடநெறிக்காக சென்றுள்ளனர்.