ஒஸ்கர் மேடையில் ஒலித்த போர் குரல்! நிர்வாணமாக வந்து அதகளப்படுத்திய ஜான் சீனா: Oscars 2024 updates

0
81

உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஓஸ்கர் கருதப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான முழு விருது விபரங்களை பார்க்கலாம்.

ஒஸ்கர் மேடையில் ஒலித்த போர் குரல்

ஓஸ்கர் விருது விழாவில் உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்ற அதன் இயக்குநர் Mstyslav Chernov ரஷ்யாவின் போர் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசினார்.

சிறந்த பாடலுக்கான விருது

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பார்பி படத்தில் இடம்பெற்ற ”What Was I Made For”? பாடல் தட்டிச் சென்றது.

சிறந்த பின்னணி இசைக்கான விருது

சிறந்த பின்னணி இசைக்கான விருதினை ஓபன்ஹெய்மர் படத்துக்காக இசையமைப்பாளர் லுட்விக் கொரான்சன் வென்றுள்ளார்.

சிறந்த இசைக்கான விருது

சிறந்த இசைக்கான விருதினை தி ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் படத்திற்கு இசையமைத்த டார்ன் வில்லர்ஸ் மற்றும் ஜோனி பர்ன் இசையமைப்பாளர்கள் வென்றனர். The Creator Maestro Mission: Impossible – Dead Reckoning Oppenheimer The Zone Of Interest – வின்னர்

முதல் விருதினை தட்டித்தூக்கிய ஓபன்ஹெய்மர்

96வது ஓஸ்கர் விருது விழாவில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், முதல் விருதை சிறந்த படத்தொகுப்புக்காக வென்றுள்ளது. பெண் எடிட்டர் ஜெனிஃபர் லேம் இந்த விருதை பெற்றார்.

காட்ஸில்லா மைனஸ் ஒன் படத்துக்கு ஓஸ்கர் விருது

அர்னால்டு மேடை ஏறி காட்ஸில்லா மைனஸ் ஒன் படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதினை வழங்கினார்.

சிறந்த தழுவல் திரைப்படம்

சிறந்த தழுவல் திரைப்படத்துக்கான விருதை அமெரிக்கன் ஃபிக்‌ஷன் திரைப்படம் வென்றுள்ளது.

ஓஸ்கர் மேடைக்கு நிர்வாணமாக வந்த ஜான் சீனா

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஓஸ்கர் விருதினை அறிவிக்க ஜான் சீனா முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

அதன் பின்னர், மேடையிலேயே அவசர அவசரமாக ஆடை மாற்றி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படத்துக்கு வழங்கினார்.

புவர் திங்ஸ் விஷுவல்ஸ்

புவர் திங்ஸ் படத்தின் மலைக்க வைக்கும் விஷுவல்ஸை பார்த்தாலே அந்த படத்துக்குத்தான் ஆஸ்கர் கிடைக்கும் என நினைத்தேன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘The Boy and the Heron’ திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றுள்ளார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

96வது ஆஸ்கர் விருது விழாவில் War Is Over திரைப்படம் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம்

96வது ஆஸ்கர் விருது விழாவில் The Wonderful Story of Henry Sugar திரைப்படம் சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

ஓபன்ஹெய்மர் படத்துக்கு 2வது ஓஸ்கர்

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஓபன்ஹெய்மர் படத்தின் ஒளிப்பதிவாளர் ’Hoyte van Hoytema’ வென்றார். El Conde Killers of the Flower Moon Mastro Oppenheimer – வின்னர் Poor Things

சிறந்த சர்வதேச திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்பட விருதை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் திரைப்படம் வென்றுள்ளது. அந்த படத்தை ஜோனதன் கிளாஸர் இயக்கி உள்ளார்.

சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படத்துக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் ஆஸ்கர் விருதை தவறவிட்டுள்ளது.

The Zone Of Interest – வின்னர் Eo Capitano Perfect Days Society Of The Snow The Teachers’ Lounge

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ரண்டோல்ப் வென்றுள்ளார். Da’Vine Joy Randolph — The Holdovers – வின்னர் Emily Blunt — Oppenheimer Danielle Brooks — The Color Purple America Ferrera – Barbie Jodie Foster — Nyad