நேரலை நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த AI ஆண் ரோபோ!

0
123

சவுதி அரேபியாவில் AI மூலம் உருவாக்கப்பட்ட ஆண் ரோபோ நேரலை நிகழ்ச்சி ஒன்றின்போது பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அந்த ரோபோ பெண்ணை நோக்கி கையை நீட்டி தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது. ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார்.

அதன்பிறகு ரோபோ அந்த செயலை நிறுத்துவது போன்று காட்சிகள் காணொளியில் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் ரோபோவின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.